FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நீட் தோல்விக்கு தீர்வு உயிரை மாய்ப்பதல்ல! ராமதாஸ்

நீட் தோல்விக்கு தீர்வு உயிரை மாய்ப்பதல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Updated On : 7 ஜூன் 2018, 10:39 am IST
பகிர்:

நீட் தோல்விக்கு தீர்வு உயிரை மாய்ப்பதல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவுடன் இருந்த சுபஸ்ரீயால் நீட் தேர்வில் 24 மதிப்பெண் மட்டும் பெற்று தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை. பல வினாக்களுக்கு  சுபஸ்ரீ சரியான பதில் எழுதியிருந்த போதிலும், தவறான விடைகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதன் காரணமாக சுபஸ்ரீ தோல்வியடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. செஞ்சி மாணவி பிரதீபாவின் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியும், சோகமும் இன்னும் முழுமையாக தீராத நிலையில், சுபஸ்ரீயின் மறைவை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இத்தகைய தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

நீட் தேர்வு நடத்தப்படும் விதமும், அதற்கான பாடத்திட்டமும் தமிழக மாணவர்களுக்கு முற்றிலும் புதிதாகும். அதுமட்டுமின்றி, தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டால் மட்டும் தான் இத்தேர்வில் வெற்றி பெற முடியும் எனும் சூழலில், அதற்கான வாய்ப்பு இல்லாத மாணவச் செல்வங்கள் தோல்வியடைவது இயல்பு தான். இதில் மாணவச் செல்வங்களின் தவறு எதுவும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது அதற்காக மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்வது தேவையற்றது. இனியும் எந்த ஒரு மாணவரோ, மாணவியோ நீட் தோல்விக்காக உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது.

அதேநேரத்தில் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ என மாணவச் செல்வங்களை தொடர்ந்து பலி வாங்கி வரும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments