FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சூழல் சுற்றுலா கொள்கை' வெளியீடு

வனங்கள் மற்றும் வன உயிர்களைப் பாதுகாக்க வகை செய்திடும் சூழல் சுற்றுலா கொள்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 29 ஜூன் 2018, 4:20 am IST
தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சூழல் சுற்றுலா கொள்கை புத்தகத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட பெற்றுக் கொள்கிறார் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். 
பகிர்:

வனங்கள் மற்றும் வன உயிர்களைப் பாதுகாக்க வகை செய்திடும் சூழல் சுற்றுலா கொள்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சூழல் சுற்றுலா கொள்கை புத்தகத்தை முதல்வர் பழனிசாமி வெளியிட, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக் கொண்டார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-தமிழகத்தின் வன வளத்தைப் பாதுகாக்கவும், வன வளத்தைப் பெருக்குவதற்கான உணர்வினை அனைவரிடமும் வளர்க்கவும், உள்ளூர் மக்களை இயற்கை சுற்றுலா திட்டத்தில் முழுமையாக பங்கேற்கச் செய்து அவர்களது வேலைவாய்ப்பை பெருக்க வகை செய்திட தமிழ்நாடு சூழல்சார் சுற்றுலாக் கொள்கை வெளியிடப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தக் கொள்கையை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டார்.
பல்வேறு கருத்துகள்: உயிர்பன்மையைப் பாதுகாத்தல், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியும், பல்வேறு துறை வல்லுநர்கள், தன்னார்வ நிறுவனங்கள், சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் சூழல் சுற்றுலா கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கையை செயல்படுத்துவதற்காக ஒருங்கிணைக்கும் துறையாக வனத்துறை செயல்படும். இந்தக் கொள்கையின் நோக்கங்கள், திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மாநில சூழல் சுற்றுலா வாரியம் என்ற சிறப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டு செயல்படும். இந்த நிறுவனமானது, சூழல் சுற்றுலாவுக்கு உகந்த புதிய இயற்கை பகுதிகளைக் கண்டறிந்து, அவைகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு அளித்தல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை முறைப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
சூழல் சுற்றுலா கொள்கை வெளியிடுதல் நிகழ்வில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments