FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜூலை 6-இல் பேரவை கூட்டம் இல்லை

ஜூலை 6-ஆம் தேதி பேரவைக் கூட்டத் தொடர் இல்லை என்று அவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

Updated On : 29 ஜூன் 2018, 2:02 am IST
பகிர்:

ஜூலை 6-ஆம் தேதி பேரவைக் கூட்டத் தொடர் இல்லை என்று அவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.
வரும் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் வீட்டு வசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை, பொதுத்துறை, மாநில சட்டப்பேரவை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்கள்-ஏனைய ஓய்வுக்கால நன்மைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜூலை 6-க்குப் பதிலாக 5-ஆம் தேதி ஒருநாள் மட்டுமே விவாதம் நடைபெறும் எனவும், 6-ஆம் தேதி பேரவைக் கூட்டம் இல்லை எனவும் அவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார். வரும் 9-ஆம் தேதி துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments