FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வயலில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி வெடித்து பெண் காயம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே புதன்கிழமை மாலை வயலில் புல் அறுக்கும்போது, நரி பிடிக்க வைத்திருந்த நாட்டு வெடி (வெங்காய வெடி) வெடித்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

Updated On : 29 ஜூன் 2018, 2:06 am IST
நாட்டு வெடி வெடித்து காயமடைந்த புஷ்பவள்ளி.
பகிர்:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே புதன்கிழமை மாலை வயலில் புல் அறுக்கும்போது, நரி பிடிக்க வைத்திருந்த நாட்டு வெடி (வெங்காய வெடி) வெடித்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார்.
உக்காடுதென்பரை காமண்டி தெருவைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மனைவி புஷ்பவள்ளி (60). இவர், புதன்கிழமை மாலை கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக வயல் பகுதிக்குச் சென்றுள்ளார். அதே பகுதியில் பாமணியாற்றம் கரையோரம் உள்ள அ. ரெத்தினம் என்பவரது வயலில் புல் அறுத்துக்கொண்டிருந்தபோது, அங்கு நரி பிடிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியின் மீது புஷ்பவள்ளியின் கை பட்டதாம். உடனே அந்த வெடி வெடித்ததில் அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் புஷ்பவள்ளியை மீட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
தகவலறிந்து அங்கு சென்ற மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன், பரவாக்கோட்டை காவல் ஆய்வாளர் உஷாநந்தினி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து திருமக்கோட்டை காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments