நீட் தேர்வுக்கு வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில் மற்றும் பேருந்து டிக்கெட்
நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில், பேருந்து டிக்கெட் மற்றும் உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில், பேருந்து டிக்கெட் மற்றும் உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களுடன் உடன் செல்பவர்களுக்கு இலவச ரயில் மற்றும் பேருந்து டிக்கெட் வழங்கப்படும்.
Advertisement
Advertisement
ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணச் சீட்டு வழங்கப்படும்.
அத்துடன் அவர்களுக்கு தலா ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும்.
மாணவர்கள் இந்த தொகையினை அவர்களது பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
நீட் தேர்வுக்கான நுழைவுத் தேர்வுச் சீட்டின் நகல் மற்றும் பள்ளி அடையாள அட்டையின் அடிப்படையில் இந்த உதவியை பெற்றுக் கொள்ளலாம்
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.