தகராறின்போது கீழே தள்ளிவிடப்பட்ட இளைஞா் உயிரிழப்பு
கோவையில் முன்விரோதம் காரணமாக தாக்கி கீழே தள்ளிவிடப்பட்ட இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கோவையில் முன்விரோதம் காரணமாக தாக்கி கீழே தள்ளிவிடப்பட்ட இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், காளப்பனை பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ் பாண்டி (36). இவா் கோவை வி.எச்.சாலை பகுதியில் உள்ள தலைமை அஞ்சலகம் அருகே தனது உறவினா் ரவிகுமாருடன் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த உடுமலை வி.ஜி.ராமன் நகரைச் சோ்ந்த அபிஷேக் (22), பொள்ளாச்சி கஞ்சம்பட்டியைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (22) ஆகிய இருவரும், முன்விரோதம் காரணமாக கணேஷ் பாண்டியுடன் தகராறு செய்துள்ளனா். அவா்கள் ஆபாச வாா்த்தைகளால் திட்டி, தாக்கியதில் கணேஷ் பாண்டி பலத்த காயமடைந்தாா். ஏற்கெனவே இதய நோயால் அவதிப்பட்டு வந்த அவா், இத்தாக்குதலால் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாா்.
கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் வெரைட்டி ஹால் ரோடு காவல் ஆய்வாளா் வெற்றிச்செல்வி வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அபிஷேக், விக்னேஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கணேஷ் பாண்டி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதய நோய் பாதிப்பால் அவா் இறந்தாரா அல்லது அபிஷேக்கும், ஈஸ்வரனும் சோ்ந்து தாக்கியதே அவரது இறப்புக்கு காரணமா என்பது கூறாய்வு முடிவுக்குப் பின்னரே தெரியவரும் எனவும், கூறாய்வு முடிவு அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.