FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜெயலலிதா மரணம்: மருத்துவர் சாந்தாராம் விசாரணை ஆணையத்தில் ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழத்தின் முன்னாள் துணைவேந்தரும், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவருமான டி.சாந்தாராம் விச

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழத்தின் முன்னாள் துணைவேந்தரும், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவருமான டி.சாந்தாராம் விசாரணை ஆணையத்தில் புதன்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 
மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பும், அதற்குப் பின்பும் அவரது உடல்நிலை, சிகிச்சை ஆகியவை குறித்து விசாரணை ஆணையத்தில் சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். 
இதைத் தொடர்ந்து, சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்கள், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தவர்களிடம் அவரது தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் ஆஜர்: கடந்த 2001-இல் இருந்து ஜெயலலிதாவின் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளித்தவரும், குறிப்பாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு சிகிச்சை அளித்தவருமான மருத்துவர் சாந்தாராமுக்கு விசாரணை ஆணையம் அண்மையில் அழைப்பாணை அனுப்பி இருந்தது.
இதையடுத்து, விசாரணை ஆணையத்தில் புதன்கிழமை ஆஜரான மருத்துவர் சாந்தாராமிடம் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். அதில், கடந்த 2001-இல் இருந்து சர்க்கரை நோய் தொடர்பாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர் சாந்தாராம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவர்களான ஜெயஸ்ரீகோபால், ராமச்சந்திரன் ஆகிய இருவரும் விசாரணை ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments