FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விடைத் தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வல்லத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் திருச்சி மண்டலத்துக்கு உள்பட்ட திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர் பெரம்பலூர், புதுக்கோட்டை உள்பட 9 மாவட்டங்களுக்கான பட்டயப்படிப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி மே 7-ம் தேதி தொடங்கியது. இதில், ஏறத்தாழ 250 விரிவுரையாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்பணியை விரிவுரையாளர்கள் புதன்கிழமை புறக்கணித்து, கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாரியத் தேர்வின் தினப்படி ரூ. 190-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வாரியத் தேர்வின் பயணப் படியை உயர்த்தி தர வேண்டும். வாரியத் தேர்வின் கருத்தியல் விடைத்தாள் திருத்தும் பணியில் விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 7-லிருந்து ரூ. 25 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வாரிய கருத்தியல் தேர்வுக்குச் செல்லும் அறைக் கண்காணிப்பாளருக்கு அமர்வுக்கு ரூ. 45-லிருந்து ரூ. 200 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதில், ஏராளமான விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments