FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மக்களவைத் தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

மக்களவைத் தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

மக்களவைத் தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு.

மாவட்ட அதிமுக சார்பில், தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்தப் பணியில் அதிமுக நிர்வாகிகள் தீவிர கவனம் செலுத்தி புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அதிமுக தலைமை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளராக யாரை அறிவிக்கிறதோ அவரது வெற்றிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் அவர். 

Advertisement

Advertisement

கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தின்போது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலக 150 பேர் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கூட்டத்தில், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணைச் செயலர் என். சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் அமலி டி. ராஜன், பொருளாளர் ஜெபமாலை, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் செல்லத்துரை, மோகன், சின்னப்பன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் தளபதி க. பிச்சையா, முன்னாள் வாரியத் தலைவர் இரா. அமிர்தகணேசன், மாவட்ட நிர்வாகிகள் யு.எஸ். சேகர்,  ராஜா, ராஜசேகரன், குருத்தாய், நடராஜன், அக்ரி பெருமாள், பகுதிச் செயலர் ஏ. முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments