மதுபாட்டில்களை வாங்குவதற்கு ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா?: உயர் நீதிமன்றக் கிளை கேள்வி
வயது வந்தவர்கள் மட்டும் மதுபாட்டில்களை வாங்குவதை உறுதி செய்வதற்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா? என மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை: வயது வந்தவர்கள் மட்டும் மதுபாட்டில்களை வாங்குவதை உறுதி செய்வதற்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா? என மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் பார் உரிமங்களை புதுப்பிப்பதை நிறுத்தி வைக்க கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறியதாவது:
Advertisement
Advertisement
மதுக்கடைகளில் வயது வந்தவர்கள் மட்டும் மதுபாட்டில்களை வாங்குவதற்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா? டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக் கூடாது?; டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வதை மட்டும் வைத்துக்கொள்ளலாமே?
இவ்வாறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம் இந்த வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மார்ச் 12-ல் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.