முகப்பு
தமிழ்நாடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 - ல் மக்களவைத் தேர்தல்

தமிழகம் மற்றும் புதுசேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

Updated On : 10 மார்ச் 2019, 6:05 pm IST
பகிர்:

புது தில்லி: தமிழகம் மற்றும் புதுசேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஞாயிறன்று தில்லியில் வெளியிட்டார்.

அதன்படி நாடு முழுவதும் எழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரண்டாவது கட்டத்தில் தேர்தல்  நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

அவரது அறிவிப்பின்படி தமிழகம் மற்றும் புதுசேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவனை விபரங்கள் வருமாறு:

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் நாள்:           19.03.2019

வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்:        26.03.2019

வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் நாள்:          27.03.2019

வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்: 29.03.2019  

வாக்குப் பதிவு:                                                                          18.04.2019

வாக்கு எண்னிக்கை நடைபெறும் நாள்:                 23.05.2019       

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட காரணத்தினால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments