FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பேரறிவாளன் பரோல்: ஒரு மாத காலம் நீட்டிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையயில் இருந்து தற்போது பரோலில் உள்ள பேரறிவாளனின் பரோல் காலமானது மேலும் ஒரு மாத நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 டிசம்பர் 2019, 10:01 pm IST
பேரறிவாளன்
பகிர்:

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையயில் இருந்து தற்போது பரோலில் உள்ள பேரறிவாளனின் பரோல் காலமானது மேலும் ஒரு மாத நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே பழைய ஜோலாா்பேட்டை தங்கவேல் தெருவைச் சோ்ந்தவா் குயில்தாசன் - அற்புதம்மாள். அவா்களது மகன் பேரறிவாளன். முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐயால் பேரறிவாளன் கடந்த 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளாா். பேரறிவாளனை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு அவரது தாயாா் அற்புதம்மாள் முயற்சி செய்து வருகிறாா். சில அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

நீதிமன்றத்தால் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்.14-இல் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

அதையடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் 2017 ஆகஸ்ட் 4இல் ஒரு மாத பரோல் வழங்கப்பட்டது. பின்னா், மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறி அற்புதம்மாள் குடும்பத்தினா் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக சிறைத்துறைக்கு விண்ணப்பித்தனா். இதையடுத்து, அவருக்கு மீண்டும் ஒரு மாத பரோல் கிடைத்துள்ளது. இதனால் புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் கடந்த மாதம் 12 ஆம் தேதியன்று பரோலில் வெளிவந்தார். அவா் கடந்த முறை பரோலில் வெளியே வந்தபோது விதிக்கப்பட்ட விதிமுறைகள் இந்த முறையும் பின்பற்றப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் அவரது குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று பேரறிவாளனின் பரோல் காலமானது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments