FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் மோடி: தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா உளறல்

புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் மோடி என கோவையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 29 மார்ச் 2019, 8:56 am IST
பகிர்:

புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் மோடி என கோவையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கூட்டணி கட்சி தலைவர்களுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. 

இதனால் அவரது மனைவி பிரேமலதா தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கோவை, கணபதி பகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை பிரசாரம் செய்தார்.

Advertisement

Advertisement

அப்போது அவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற முரசு சின்னத்துக்கு வாக்களியுங்கள் என தவறுதலாக குறிப்பிட்ட பிரேம லதா பின்னர் சுதாரித்துக்கொண்டு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தவர் பிரதமர் மோடி என்று கூறுவதற்கு பதிலாக புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் என தெரிவித்தார்.

தற்போது அவரின் இந்த உளறல் பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments