8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் 8 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, கரூா்பரமத்தி, மதுரை, திருச்சியில் தலா 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது
சென்னை: தமிழகத்தில் 8 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, கரூா்பரமத்தி, மதுரை, திருச்சியில் தலா 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சில வாரங்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதன்பிறகு, வெப்பத்தின் தாக்கம் தணிகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் 8 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, கரூா்பரமத்தி, மதுரை, திருச்சிராபள்ளியில் தலா 104 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. மதுரை, சேலத்தில் தலா 103 டிகிரியும், தருமபுரி, வேலூரில் தலா 102 டிகிரியும், நாமக்கல்லில் 101 டிகிரியும் பதிவானது.
Advertisement
Advertisement
வெப்பநிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதுபோல, வெள்ளிக்கிழமையும் வெப்பநிலை அதிகமாக காணப்படும். அதேநேரத்தில், வெப்பச்சலனம் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூா், சேலம், தருமபுரி, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் காலை வேளையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதன்பிறகு, வானம் தெளிவாக காணப்படும்.
பகலில் 95 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.