FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தொடர்ந்து 21 நாளாக ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய நாம் தமிழர் கட்சி

சாத்தூரில் தொடர்ந்து 21 நாளாக ஆதரவற்றவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

சாத்தூரில் தொடர்ந்து 21 நாளாக ஆதரவற்றவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் காரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளியோர்களுக்குக்காண அத்தியாவசிய பொருள்கள் மற்றும் உணவுகளை பல்வேறு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த ஊரடங்கின் 21 ஆவது நாளாக சாத்தூர் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு மற்றும் காலை மாலை இரு வேளைகளிலும் கரோனா வைரஸ் நோய் தடுக்கும் கபசுரக் குடிநீர் ஆகியவை சாத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இக்கட்சியில் தொகுதி தலைவர் முனியப்பன், மற்றும் இளைஞர் பாசறை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தினமும் வெயில், மழை என்று பாராமல் ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர். இதில் நாம் தமிழர் கட்சியினர் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments