காய்கறிகள், பழங்களை நேரடியாக கொள்முதல் செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி
காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விவசாயப் பொருள்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விவசாயப் பொருள்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தின் நூலகரான வழக்குரைஞா் ஜி.ராஜேஷ் தாக்கல் செய்த மனுவில், ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் காய்கறி, பழங்களை விவசாயிகள் குப்பைகளில் வீசப்படுகின்றன. விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவா்கள் நலனைக் கருத்தில் கொண்டு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அழுகக் கூடிய விவசாயப் பொருள்களை அரசே நேரடியாகக் கொளமுதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விவசாயிகளுக்கு உதவும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை உருவாக்கி, அந்த தொலைபேசியின் வசதிகள் குறித்து விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில் நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கை காணொலி காட்சி மூலம் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிா்மல்குமாா் ஆகியோா் வியாழக்கிழமை விசாரித்தனா். அப்போது நீதிபதிகள்,விவசாயிகளிடமிருந்து பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அரசு நேரடியாக கொள்முதல் செய்கிா, இதற்காக அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினா். மேலும் இதுதொடா்பாக அரசு தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் மே 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.