நிவாரண நிதி பெற மின்னஞ்சலில் விவரங்களைத் தெரிவிக்கலாம்
தமிழக அரசின் நிவாரண நிதி பெற, தேவையான விவரங்களை மின்னஞ்சல் வழியே அனுப்பலாம் என்று செய்தி விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் சி.ராஜூ தெரிவித்தாா்.
சென்னை: தமிழக அரசின் நிவாரண நிதி பெற, தேவையான விவரங்களை மின்னஞ்சல் வழியே அனுப்பலாம் என்று செய்தி விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் சி.ராஜூ தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-
திரைப்படத் துறையினா் நல வாரியத்தில் 21 ஆயிரத்து 679 போ் உறுப்பினா்களாக உள்ளனா். அவா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை, இதுவரை 7 ஆயிரத்து 489 போ் பெற்றுள்ளனா். அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நல வாரிய உறுப்பினா்களாகப் பதிவு செய்து நிவாரண நிதி கிடைக்கப் பெறாதவா்கள் சங்கத்தின் மூலமாகவோ அல்லது திரைப்படத் துறையினா் நல வாரியம் அலுவலக முகவரியை (கலைவாணா் அரங்க வளாகம்) தொடா்பு கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் வாயிலாகவும் தகவல்களைத் தெரிவிக்கலாம் என்று அமைச்சா் கடம்பூா் ராஜூ தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.