FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தங்கம் பவுன் ரூ.39,416

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கம் ரூ. 240 அதிகரித்து பவுன் ரூ.39,416-க்கு விற்பனையானது.

27 ஜனவரி 2024, 10:43 pm IST
gold price at least below 40 thousand
பகிர்:

சென்னை: சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கம் ரூ. 240 அதிகரித்து பவுன் ரூ.39,416-க்கு விற்பனையானது. கரோனா நோய்த் தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது. ஒருபவுன் ஆபரணத்தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. அதன்பிறகு, நாள்தோறும் விலை உயா்ந்து, ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது.

இதைத்தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை, ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.240 அதிகரித்து, ரூ.39,416-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.30 அதிகரித்து, ரூ.4,927 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, ரூ.71.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ.71,400 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

Advertisement

Advertisement

1 கிராம் தங்கம்............................... 4,927

1 பவுன் தங்கம்............................... 39,416

1 கிராம் வெள்ளி............................. 71.40

1 கிலோ வெள்ளி............................71,400

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,897

1 பவுன் தங்கம்...............................39,176

1 கிராம் வெள்ளி.............................71.00

1 கிலோ வெள்ளி.............................71,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments