சொத்து தகராறில் தாய் மற்றும் சகோதரி அடித்துக் கொலை
வேலூர் மாவட்டத்தில் சொத்து தகராறில் தாய் மற்றும் சகோதரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சொத்து தகராறில் தாய் மற்றும் சகோதரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் அடுத்த பூசாரிவலசை கிராமத்தைச் சேர்ந்த இந்திராணி (70) இவருக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர் இதில் பெரியவன் முனிராஜ்(50) சின்னம்மா (40) மற்றும் சூரியகலா (38)உள்ள நிலையில் சின்னம்மாளுக்கு சற்று உடல்நல குறைபாடு உள்ளதால் திருமணமாகாத நிலையில் தனது தாயுடன் வசித்து வந்தார். முனிராஜ் அதே பகுதியில் தனியாக தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். இன்னொரு மகளான சூர்யகலா அதே பகுதியில் திருமணம் செய்து வைத்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இதனிடையே முனிராஜ் தனது தாய் இந்திராணியிடம் சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் இதனால் அடிக்கடி அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று இரவு மீண்டும் தனது தாயான இந்திராணியிடம் சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க சொல்லி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் தாய் இந்திராணி சொத்தை மகள்களுக்கும் சேர்த்து பிரித்து தருவதாக கூறியதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில் இதில் ஆத்திரமடைந்த முனிராஜ் தனது தாய் இந்திராணியை கல்லால் பலமாக தாக்கியுள்ளார். அதை தடுக்கச் சென்ற தங்கை சின்னம்மாவையும் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சின்னம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தாய் இந்திராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்திராணியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இது குறித்து பரதராமி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் சின்னம்மாவின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கொலை செய்த முனிராஜ் கைது செய்து மேலும் முனிராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.