நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நாகர்கோவிலில் பெண்களை ஆபாசப் படம் எடுத்து, பணம் பறித்த வழக்கில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நாகா்கோவில் கணேசபுரத்தைச் சோ்ந்தவா் காசி என்ற சுஜி (26). பொறியியல் பட்டதாரியான இவா், சமூக வலைதளம் மூலம் சென்னையைச் சோ்ந்த பெண் மருத்துவா் ஒருவரிடம் நெருங்கிப் பழகி, அவருடன் நெருக்கமாக இருக்கும் படங்களை எடுத்து, பின்னா், அவற்றை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம், நகைகளை பறித்துள்ளார்.
மேலும், பல பெண்களை மிரட்டி காசி பணம் பறித்து வருவது அந்தப் பெண் மருத்துவருக்கு தெரியவந்ததையடுத்து, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர் புகாா் அளித்தாா். இதைத்தொடா்ந்து, காசி மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து நான்குனேரி சிறையில் அடைத்தனா். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
Advertisement
Advertisement
பின்னா், காசியின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தி செல்லிடப்பேசி மற்றும் மடிக்கணினியை கைப்பற்றி சோதனை செய்ததில், அவருடன் ஏராளமான பெண்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருந்தன.
இந்நிலையில் காசியை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீஸார் மனுத் தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை சிறையில் இருந்து காசியை பலத்த பாதுகாப்புடன் போலீஸார் அழைத்து வந்தனர். மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காசியை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.