FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு கரோனா 

செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.

Updated On : 28 ஜூன் 2020, 1:39 pm IST
மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.மஸ்தான்
பகிர்:

செஞ்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மஸ்தானுக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் ஒரு திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது திமுகவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வசந்த கார்த்திகேயன் மற்றும் செய்யூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.அரசு ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் முறையே கோவை, சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisement

Advertisement

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம்  செஞ்சி பகுதியைச் சேர்ந்த திமுக வடக்கு மாவட்டச் செயலரும்,  செஞ்சி தொகுதி எம்எல்ஏவுமான  கே.எஸ்.மஸ்தானுக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்ததால், விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதி ஆகியுள்ளது. தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளார்.

அண்மையில் திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று சென்றதால், அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

திமுகவில் கரோனா தொற்று பாதித்த நான்காவது சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments