FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கூடுவாஞ்சேரி, வண்டலூர் பகுதிகளில் மேம்பாலங்கள்:  அடிக்கல் நாட்டினார் எ.வ. வேலு

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் இரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலம், வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் மேம்பாலப் பணிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்.

Updated On : 15 டிசம்பர் 2021, 2:36 pm IST
கூடுவாஞ்சேரி, வண்டலூர் பகுதிகளில் மேம்பாலங்கள்:  அடிக்கல் நாட்டினார் எ.வ. வேலு
பகிர்:

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் இரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலம், வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலப் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.

இன்று (15.12.2021) காலை 8.30 மணியளவில் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற விழாவில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே மேம்பாலம் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பால பணிகளை துவக்கி வைத்தார்.

அமைச்சர் எ.வ. வேலு பாலப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகையில் கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோயில் இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே இருப்புப் பாதை கடவு எண்.47க்கு பதிலாக ரூ.90.74 கோடியில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி 30-மாதக் காலத்திற்குள் நிறைவடையும். 

Advertisement

Advertisement

இந்த இரயில்வே மேம்பாலப்பணி நிறைவுற்றவுடன், ஓரகடம் தொழிற்பேட்டை ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் வாகனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலப் பணி ரூ.26.64 கோடி மதிப்பீட்டில் 18-மாதக் காலத்திற்குள் நிறைவடையும். இந்த பல்லடுக்கு மேம்பாலப்பணி நிறைவுற்றவுடன், படப்பை, ஓரகடம் செல்லும் வாகனங்களுக்கு பேருதவியாக இருக்கும். ஓரகடம் தொழிற்பேட்டைக்கு, தென் தமிழ்நாட்டிலிருந்து மூலம் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு இந்த இரண்டு பாலங்களால் காலதாமதமின்றி விரைவில் சென்றடைய பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த துவக்க விழாவில் ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஸ்ரீகணேசன் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் ம.வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments