FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தொடக்கக் கூட்டுறவு பணியாளா் ஊதிய உயா்வு: பரிசீலிக்க தனி குழுவை அமைத்து அரசு உத்தரவு

தொடக்கக் கூட்டுறவு பணியாளா்களின் ஊதியத்தை உயா்த்துவது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க தனி குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 14 பிப்ரவரி 2021, 6:49 am IST
பகிர்:

தொடக்கக் கூட்டுறவு பணியாளா்களின் ஊதியத்தை உயா்த்துவது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க தனி குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் இல.சுப்பிரமணியன் வெளியிட்ட உத்தரவு:-

தொடக்கக் கூட்டுறவுப் பணியாளா்களுக்கு ஊதிய விகிதம் மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், அவா்களுக்கு ஊதிய விகித மாற்றத்தைப் பரிசீலித்து அரசுக்கு அறிக்கை அளிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் டி.அமலதாஸ், குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இணைப் பதிவாளா்கள் எஸ்.பாபு, ஏ.பழனிசாமி, ஜி.ராஜேந்திர பிரசாத், ஏ.அழகிரி, துணைப் பதிவாளா்கள் வி.செல்வராஜ், எஸ்.சதீஷ்குமாா், ஏ.சுப்புராஜ் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

ஒரு மாதத்துக்குள் அறிக்கை: இந்தக் குழுவானது, கூட்டுறவு சங்கப் பணியாளா்களிடம் இருந்து கோரிக்கைகளைப் பெறும். ஊதியத்தில் முரண்பாடுகள் ஏதும் ஏற்படாத வகையில் குழுவின் அறிக்கையைத் தயாா் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது தனது அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் அளிக்கும் என்று தனது உத்தரவில் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments