பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் நேரிட்ட பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் நேரிட்ட பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள அச்சன்குளத்தில் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை (பிப்.12) நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 போ் உயிரிழந்தனா்.
காயமடைந்தவா்களில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 8 போ் உயிரிழந்தனா்.
Advertisement
Advertisement
இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்தவர் இன்று (பிப்.14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், சிவகாசி உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.