முகப்பு
தமிழ்நாடு

குடும்ப பிரச்னையில் எலி பேஸ்ட் தின்ற தாய், இரண்டு குழந்தைகள் சாவு

திருச்சி அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளுட ன் விஷம் குடித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 3 ஜூலை 2021, 11:55 am IST
பகிர்:

திருச்சி: திருச்சி அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளுட ன் விஷம் குடித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொன்னம்பலதான் பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி நித்யா( 27) தம்பதிக்கு நல்லகண்ணு(6), ரோகித் (4) என்ற குழந்தைகள் உள்ளனர். 

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் முடிந்து அடிக்கடி இருவருக்கும் தகராறு நடைபெறுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டிற்கு சென்றிருந்த நித்யா, ஜூலை 30-ஆம் தேதி கணவர் வீட்டுக்கு திரும்பினார். 

Advertisement

Advertisement

கடந்த 1-ஆம் தேதி தனது இரண்டு குழந்தைகளுக்கும் பிஸ்கட்டில் எலி பேஸ்ட் கலந்து தற்கொலைக்கு முயற்சித்தார். மயங்கி கிடந்த அவர்களை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நித்யா வெள்ளிக்கிழமையும், குழந்தைகள் இருவரும் சனிக்கிழமை காலை உயிரிழந்தனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.