‘படகும் இல்லை; பயிற்சியும் இல்லை’.. அசாம் வெள்ளத்தில் 2,000 பேரைக் காப்பாற்றிய இளைஞர்!
அசாம் வெள்ளத்தில் சிக்கிய 2,000 பேரைக் காப்பாற்றிய இளைஞரைப் பற்றி...
அசாமில் கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கிய 2,000-க்கும் மேற்பட்டோரை மீட்ட இளைஞரின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் பெய்த கனமழை வெள்ளத்தால் ஏழு மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
அசாம் வெள்ளத்தில் 350-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டு 20,000-க்கும் அதிகமான ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Advertisement
Advertisement
வெள்ளத்தில் விலங்குகளும் கால்நடைகளும் அடித்துச் செல்லப்பட்டதாலும், சாலைகள் மூடப்பட்டதாலும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். .
இந்த அசாதாரண சூழலுக்கு மத்தியில் எந்தப் படகுமின்றி, பயிற்சியுமின்றி 25 வயதான இளைஞர் ஒருவர் தனது கிராம மக்கள் 2,000-க்கும் மேற்பட்டோரை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜூலை 19 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு, 25 வயதான ஸ்ரவன் குமார், தனது வீட்டில் எல்பிஜி சிலிண்டர் வசதி இல்லாத நிலையில், ஆற்றங்கரையில் அடித்துவரும் விறகுகளைப் பொறுக்குவதற்காக பிஹுபோரில் உள்ள திக்கோ ஆற்றங்கரைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது வழக்கத்துக்கு மாறான காட்சிகள் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
ஆற்றில் வழக்கமான நீர்வரத்துக்கு பதிலாக கடுமையான அளவில் நீர்மட்டம் உயர்ந்து அவர்களது வீட்டையும் கிராமத்தையும் வெள்ள நீர் மூழ்கடிக்கத் தொடங்கியது.
10-ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டவரான ஸ்ரவன் குமார், துலுங்கா நோவா என்றழைப்படும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட விறகு, மரக்கடைகளால் உருவாக்கப்பட்ட கட்டுமரம் போன்ற படகைப் பயன்படுத்தி வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கத் தொடங்கியுள்ளார். குழந்தைகளையும் முதியோர்களையும், கூரைகளை சிக்கிவர்களையும், நோயாளிகளையும் கர்ப்பிணிகளையும் தனது படகில் மீட்டுள்ளார் ஸ்ரவன்.
வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியிருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் உள்பட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,000 பேரை தானும், தன்னுடைய குழுவினரும் காப்பாற்றியதாகக் கூறுகிறார் ஸ்ரவன்.
சுமார் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், தனது உயிரையும் பொருள்படுத்தாமல் ஸ்ரவனின் செயல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
படிப்பைப் பாதியில் விட்டு போதிய பயிற்சி எதுவுமின்றியும், இரவு முழுவதும் மழை வெள்ளம் எனப் பாராமல், பொதுமக்கள் பலரின் உயிரையும் காப்பாற்றிய ஸ்ரவன் மற்றும் அவரது குழுவினரை சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
When 25-year-old Shravan Kumar walked to the banks of the Dikhow River in Bihubor at 3 am on July 19, he had no idea he was about to lead one of the most remarkable rescue efforts of Assam's flood season - one that would ultimately save nearly 2,000 lives across five villages.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.