FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மிகவும் மோசமான பேரிடர்! நேபாளத்தில் பலி 177 ஆக உயர்வு! 800+ பேரைக் காணவில்லை!

நேபாளத்தில் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட மிகவும் மோசமான பேரிடர் என்ற அந்த நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளது பற்றி...

நேபாள வெள்ளம் - PTI
பகிர்:

நேபாளத்தில் திபெத்தையொட்டி இருக்கும் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 300 இந்தியா்கள் உள்பட 580 வெளிநாட்டினர் என மொத்தம் சுமாா் 800 பேரைக் காணவில்லை என்று நேபாள அரசு இன்று (ஆக. 27) காலை தகவல் தெரிவித்துள்ளது.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை காலை 9 மணியளவில் திபெத் பகுதியில் இருந்து திடீரென வெள்ளம் கீழ்நோக்கி பல அடி உயரத்துக்கு கரைபுரண்டு வந்தது. இதில் கோஷி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலங்கள், ஆற்றங்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

Advertisement

Advertisement

பனிப்பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதே இந்த வெள்ளத்திற்கு காரணம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலவரம் குறித்து நேபாள அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது வரை 177 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 300 இந்தியா்கள் உள்பட 580 வெளிநாட்டினரின் விவரம் இன்னும் தெரியவில்லை. நேபாள வெள்ளத்தில் சுமார் 800 பேரைக் காணவில்லை என்று தரவுகள் கூறுகின்றன.

தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ள தகவலின்படி 826 பேரை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளது.

இந்தியாவில் இருந்து சென்றவர்கள் பெரும்பாலும் கைலாச மானசரோவர் யாத்திரைக்கு சென்றுள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட மிகவும் மோசமான பேரிடர் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Death toll rises to 177 in Nepal flash floods

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments