தமிழ்நாடு

சென்னையில் 100 ரூபாயை நெருங்கும் பெட்ரோல் விலை; நெல்லையில் ரூ.100.19

DIN


சென்னையில் இன்று காலை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.99.80க்கும் டீசல் லிட்டருக்கு 93.72க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலைகளில் மாறுபாடு இல்லாமல் இருந்த நிலையில், ஜூன் மாதத்திலிருந்து எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.49க்கும், டீசல் ரூ.93.46க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.99.80க்கும், டீசல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து ரூ.93.72க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை 100 ஐ தொட்டுள்ளது.

தமிழகத்தில் நெல்லையில் இன்று பெட்ரோல் விலை ரூ.100.19க்கும், டீசல் லிட்டருக்கு 94.13க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102 42க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.96க்கும் விற்பனையாகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT