FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சரத்குமார் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடத் தயார்: ராதிகா

சமத்துவக் கட்சி தலைவர் சரத்குமார் ஆணையிட்டால் சென்னை வேளச்சேரி அல்லது கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட தயார் என்று அக்கட்சியின்  முதன்மை துணை பொதுச்செயலர் நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.

Updated On : 3 மார்ச் 2021, 1:32 pm IST
சரத்குமார் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடத் தயார்: ராதிகா
பகிர்:

சமத்துவக் கட்சி தலைவர் சரத்குமார் ஆணையிட்டால் சென்னை வேளச்சேரி அல்லது கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட தயார் என்று அக்கட்சியின்  முதன்மை துணை பொதுச்செயலர் நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் அகில இந்திய  சமத்துவ மக்கள் கட்சியின் 6-ஆவது பொதுக்குழுக் கூட்டம் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது.

தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு சரத்குமார் தவிர வேறு யாரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யாததால் இரு பதவிக்கும் சரத்குமார் தேர்வு செய்யப்பட்டதாக விழா மேடையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் பேசிய ராதிகா சரத்குமார், சரத்குமார் எதற்கும் பயப்பட மாட்டார், அன்புக்கு மட்டும்தான் பயப்படுவார், வேறு எதற்கும் பயப்படமாட்டார். இந்தத் தேர்தல் மாற்றத்தினை கொண்டு வரும் தேர்தல் என்று நிச்சயமாக சொல்வேன். வெற்றி என்பது கறிவேப்பலை கொத்தமல்லி கிடையாது.

நான் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி, வேளச்சேரி தொகுதியில் நிற்க வேண்டும் என்று கட்சியினர் சொல்லி வருகின்றனர். நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments