தமிழ்நாடு

அரசின் இ-பதிவு இணையதளத்தில் மீண்டும் திருமணம் சேர்ப்பு

DIN


தமிழக அரசின் இ-பதிவு இணையதளத்தில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

வெளியூர் செல்வதற்கான காரணங்களில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு இ-பாஸ் அவசியமென்றும் அதனை விண்ணப்பிக்க சில வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.

மருத்துவ அவசரம், முதியோா் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சாா்ந்த காரியங்கள், திருமணம் போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இ-பாஸ் பதிவில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதால் அதனை நீக்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இ-பதிவு இணையதளத்தில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக இன்று (மே 18) அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வார பலன்கள்: 12 ராசிக்கும்..

உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி: மாநில அளவில் 6ம் இடம்!

வாழ்க்கை மிகப்பெரிய திரைச்சீலை...!

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் 29-வது இடத்தைப் பிடித்த நாகை!

SCROLL FOR NEXT