அனைத்துத் துறை செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்படும்: நிதியமைச்சர்
தமிழக அரசின் அனைத்துத் துறை செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழக அரசின் அனைத்துத் துறை செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
கூட்டத் தொடரில் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
Advertisement
Advertisement
நிதியமைச்சர் தனது உரையில், தமிழக அரசின் அனைத்துத் துறை செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறை கொண்டு வரப்படும்.
1921 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேரவை நிகழ்வுகள் குறித்த அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்படும்.
பொது விநியோகத் திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும்.
பெரும்பாலான துறைகள் கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்படும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.