FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஹெலிகாப்டர் விழும்முன்  விடியோ எடுத்தது எப்படி? சுற்றுலா பயணி விளக்கம்

முப்படை தலைமைத் தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 13 பேர் பலியான நிலையில், விபத்திற்கு சில நொடிகளுக்கு முன்னர் சுற்றுலா பயணிகளால் எடுக்கப்பட்ட விடியோ வைரலாகியது.

28 ஜனவரி 2024, 11:10 am IST
ஹெலிகாப்டர் விழும்முன்  விடியோ எடுத்தது எப்படி? சுற்றுலா பயணி விளக்கம்
பகிர்:

கோவை: முப்படை தலைமைத் தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 13 பேர் பலியான நிலையில், விபத்திற்கு சில நொடிகளுக்கு முன்னர் சுற்றுலா பயணிகளால் எடுக்கப்பட்ட விடியோ வைரலாகியது.

இந்த விடியோவில், ஹெலிகாப்டர் பனி மூட்டத்தால் மலைப்பகுதியில் தாழ்வாக செல்வதும் தொடர்ந்து சற்று நேரத்தில் வெடித்து சிதறும் சத்தம் கேட்க, இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

இந்த நிலையில்  அந்த விடியோவை எடுத்தவர்கள் கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோ என்கிற குட்டி மற்றும் அவருடைய நண்பர் நாசர் ஆகியோர் என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது பற்றி ஜோ கூறுகையில, நான் போட்டோகிராபராக வேலை செய்து வருகிறேன். என்னுடைய நண்பர் நாசர் மற்றும் அவருடைய மனைவி, பிள்ளைகளுடன்  காட்டேரி வனப்பகுதியில் சுற்றுலா சென்றோம். 

அப்பகுதி நன்றாக இருக்கும் என்பதால், நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் இரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றோம்.  சரியாக டிசம்பர் 8ம் தேதி 12.15 மணிக்கு திடீரென ஹெலிகாப்டர் ஒன்று வந்ததால் என்னுடைய மொபைலை எடுத்து விடியோ எடுத்தேன்.  ஹெலிகாப்டர் மிகுந்த சத்தத்துடன் வந்ததாலும், நேரில் பார்ப்பதாலும் வியப்பில் விடியோ எடுத்தேன். பின்பு சிறிது நேரத்தில் விழுந்ததுபோல் சத்தம் கேட்டது. என்னுடைய நண்பர் நாசர் விழுந்து விட்டதா என கேட்டார். அதற்கு நான் ஆமாம் என்றேன். மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டோம்.

பின்பு அங்கிருந்து நாங்கள் காரில் கிளம்பும் போது 15 நிமிடத்தில் அங்கு ஒரு காவல்துறை ஜீப் ஒன்று வந்தது. அவரிடம் கேட்டதற்கு இங்கே நிற்கவேண்டாம் புறப்படுங்கள் எனக் கூறினார். தொடர்ந்து நானும் என்னுடைய நண்பர் குடும்பத்தினரும் அங்கிருந்து ஊட்டிக்கு புறப்பட்டோம். பின்பு இரவு தான் டிவி பார்த்து தகவலை தெரிந்துகொண்டோம். 

அதன் பிறகு அன்று இரவே நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றோம். அங்கிருந்து காவல் நிலையத்திற்கு போகச் சொன்னார்கள். அதன் பிறகு தான் காவலர்கள் எங்கள் விடியோவை வெளியிட்டனர். எங்களை மத ரீதியில் சித்தரிப்பதாகக் கேள்விபட்டோம், அதற்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது‌. நாங்கள் சாதாரணமாக சுற்றுலா சென்றவர்கள் தான் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments