புத்தாண்டு அன்று கோயில்களில் நள்ளிரவு சாமி தரிசனத்திற்கு தடையில்லை: அமைச்சர் சேகர் பாபு பேட்டி
புத்தாண்டையொட்டி பக்தர்கள் நள்ளிரவு சாமி தரிசனத்திற்கு தடையில்லை என இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை: புத்தாண்டையொட்டி பக்தர்கள் நள்ளிரவு சாமி தரிசனத்திற்கு தடையில்லை என இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு அன்று நள்ளிரவு கோயில்களில் சாமி தரிசனத்திற்கு தடையில்லை.
மேலும் அரசு அறிவுறுத்தியுள்ள நோய்த்தடுப்பு முறைகளான தனி மனித இடைவெளி, முகக்கவசம் போன்ற விதிமுறைகளை மக்கள் கட்டயாம் பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
நாடு நலம் பெற, மக்கள் வளம் பெற வருகின்ற ஆண்டு நல்லாண்டாக அமைவதற்கு கோயில்களில் சாமி தரிசனத்திற்கு செல்பவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க | தமிழக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.