விருதுநகர்: மின்னல் தாக்கியதில் கட்டட தொழிலாளர்கள் 4 பேர் பலி
விருதுநகரில் மின்னல் தாக்கி 4 கட்டட தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் மின்னல் தாக்கி கட்டட தொழிலாளர்கள் 4 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி நகரில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அதே நகரைச் சேர்ந்த சூர்யா(22), ரோசல்பட்டியைச் சேர்ந்த ஜக்கம்மாள்(55), கார்த்திக்(28), முருகன்(24) ஆகியோர் கட்டுமானப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அப்பகுதியில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அப்போது, எதிர்பாராத விதமாகக் கட்டடத்தின் மாடியில் இருந்த சூர்யா உள்ளிட்ட 4 பேரும் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பாண்டியன் நகர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.