FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சுதந்திர நாள் விழா: ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொதுதீட்சிதர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது குறித்து...

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 9:06 am IST
சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி - டிஎன்எஸ்
பகிர்:

Independence Day Celebration: National Flag Hoisted on Sri Natarajar Temple Tower!

சிதம்பரம்: நாட்டின் 80 ஆவது சுதந்திர நாளையொட்டி, சனிக்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொதுதீட்சிதர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயிலில் 80 ஆவது சுதந்திர நாளையொட்டி, பொதுதீட்சிதர்கள் சனிக்கிழமை காலை 6 மணிக்கு தேசியக் கொடியை வெள்ளித்தட்டில் வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்தனர்.

Advertisement

Advertisement

படைத்து வெள்ளித்தட்டில் தேசியக்கொடியை எடுத்து வந்த தீட்சிதர்கள் - டிஎன்எஸ்

பின்னர் மேளதாளத்துடன் கோயில் செயலாளர் ஜெ.ஜெயசூர்யா தீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் தேசியக் கொடியை எடுத்து வந்து கிழக்கு கோபுரத்தில் உச்சியில் ஏற்றி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

summary

Independence Day Celebration: Hoisted the National Flagon at the Sri Natarajar Temple Tower

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments