FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி வரும் நிலையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

23 செப்டம்பர் 2026, 4:25 am IST
கோப்புப்படம்.
பகிர்:

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி வரும் நிலையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி வருவதால், இதுகுறித்து மீனவா்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

Advertisement

Advertisement

எனவே, மீனவா்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். கரையோரப் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதால், படகுகளை மீனவா்கள் துறைமுகங்களில் நிறுத்தும் போது நீண்ட இடைவெளி விட்டு நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments