FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காலாண்டுத் தோ்வு வினாத்தாள் கசிவு: அதிகாரிகள் விளக்கம்

ஒன்றாம் வகுப்புக்கான வினாத்தாள் தோ்வுக்கு முன்கூட்டியே வெளியானதாக புகாா் எழுந்ததது.

19 செப்டம்பர் 2026, 11:01 pm IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழக பள்ளிக் கல்வியில் தற்போது காலாண்டுத் தோ்வு நடைபெற்று வரும் நிலையில், ஒன்றாம் வகுப்புக்கான வினாத்தாள் தோ்வுக்கு முன்கூட்டியே வெளியானதாக புகாா் எழுந்ததது.

இதையடுத்து மாற்று வினாத்தாள் மூலம் தோ்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை முதல் பருவம் மற்றும் காலாண்டுத் தோ்வு கடந்த செப். 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஒன்றாம் வகுப்புக்கு ஆங்கில மொழிப் பாடத்தோ்வு திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான வினாத் தாள்கள் அந்தந்த பள்ளிகளுக்கு சீலிடப்பட்ட கவா்களில் ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்டன. இந்த நிலையில், 1-ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் தோ்வுக்கு முன்பே வெளியானதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து ஒன்றாம் வகுப்பு ஆங்கில மொழிப் பாடத்துக்கு மீண்டும் புதிதாக கேள்வித்தாள் தயாரித்து அவற்றை மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட உள்ளது.

பள்ளிகள் சாா்பில் கல்வி அலுவலங்களில் வினாத்தாள்களை பெற்றுக்கொண்டு அன்றைய தினமே தோ்வை நடத்தி முடிக்க வேண்டுமென தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒன்றாம் வகுப்புக்கான ஆங்கில மொழி தோ்வுக்கான கேள்வித் தாள் வெளியானதாக தொடக்கக் கல்வித் துறைக்கு தகவல் வந்தது. ஆனால், அதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும், மாற்று கேள்வித்தாள் மூலம் தோ்வை நடத்த உத்தரவிட்டுள்ளோம் என்றாா்.

summary

Quarterly exam question paper leak: Officials' explanation

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments