தமிழ்நாடு

பாப்பாக்குடி அருகே மோதலில் காயமடைந்த மாணவர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

DIN

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து மாணவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பாசமுத்திரம் அருகே பொதுக்குடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளக்கால் பொதுக்குடி, அடைச்சாணி, பாப்பாக்குடி, இடைகால் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவர், மாணவிகள் பயின்று வருகின்றனர். 

பள்ளிக்கு வரும் மாணவர்கள் தங்களது கையில் சாதியை குறிப்பிடும் வகையில் கயிறு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 25 -ஆம் தேதி இரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனராம். 

இதில், பாப்பாக்குடி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் பிளஸ் 2 மாணவர் செல்வ சூர்யா (17) காயம் அடைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், இன்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி செல்வ சூர்யா உயிரிழந்தார். 

இதையடுத்து செல்வ சூர்யாவின் உறவினர்கள் பாப்பாக்குடி பெருமாள் கோயில் தெருவில் திரண்டு அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டபாப்பாக்குடி அருகே மோதலில் காயமடைந்த மாணவர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து மாணவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பாசமுத்திரம் அருகே பொதுக்குடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளக்கால் பொதுக்குடி, அடைச்சாணி, பாப்பாக்குடி, இடைகால் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவர், மாணவிகள் பயின்று வருகின்றனர். 

பள்ளிக்கு வரும் மாணவர்கள் தங்களது கையில் சாதியை குறிப்பிடும் வகையில் கயிறு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 25 -ஆம் தேதி இரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனராம். 

இதில், பாப்பாக்குடி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் பிளஸ் 2 மாணவர் செல்வ சூர்யா (17) காயம் அடைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், இன்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி செல்வ சூர்யா உயிரிழந்தார். 

இதையடுத்து செல்வ சூர்யாவின் உறவினர்கள் பாப்பாக்குடி பெருமாள் கோயில் தெருவில் திரண்டு அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT