முகப்பு
தமிழ்நாடு

இந்துமுறைப்படி ஆப்ரிக்க பெண்ணை மணமுடித்த தமிழக இளைஞர்

ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண்ணை இந்து முறைப்படி வேத மந்திரம் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, தாலி கட்டி, அம்மி மிதித்து மெட்டி அணிவித்து உறவினர்கள் புடை சூழ திருமணம் செய்தார் தமிழக இளைஞர்.

Updated On : 30 ஏப்ரல் 2022, 5:00 pm IST
இந்துமுறைப்படி ஆப்ரிக்க பெண்ணுடன் தமிழக இளைஞருக்கு டும்.. டும்..
பகிர்:

கோவை: ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண்ணை இந்து முறைப்படி வேத மந்திரம் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, தாலி கட்டி, அம்மி மிதித்து மெட்டி அணிவித்து உறவினர்கள் புடை சூழ திருமணம் செய்தார் தமிழக இளைஞர்.

கோவில்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம், தர்மலட்சுமி ஆகியோரின் மகன் முத்துமாரியப்பன். இவர்  கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேம்ரூனிற்கு சென்று அங்குள்ள ஆயில் மற்றும் கேஸ் நிறுவனத்தில் சி.என்.சி. மெசின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். 

அங்கு முத்துமாரியப்பன் பணிபுரிந்த அதே நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த எம்மா எஞ்சிமா மொசொக்கே என்பவரின் மகளான வால்மி இனாங்கா மொசொக்கே ஆகிய இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மணப்பெண்ணான வால்மி இனாங்கா மொசொக்கே இந்தியாவிற்கு சென்று இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதற்கு அவரது தாயாரும் உறவினர்களும் சம்மதம் தெரிவிக்க உறவினர்கள் 10 பேருடன் இந்தியா வந்துள்ளார். இந்த நிலையில் இன்று கோவை துடியலூர் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ வெகு விமர்சையாக இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் மணமகளை பட்டுப்புடவை கட்டி அவரது உறவினர்கள் மலர் பந்தலின் கீழ் ஊர்வலமாக மணமேடைக்கு அழைத்து வந்தனர். 

தொடர்ந்து புரோகிதர் வேத மந்திரம் ஓத ஆப்பிரிக்க மணப்பெண்ணான வால்மி இனாங்கா மொசொக்கேவிற்கு தமிழக மணமகன் முத்துப்பாண்டி தாலி கட்டினார். தொடர்ந்து இருவரும் மாலை மாற்றிக்கொண்டு அம்மி மிதித்து மெட்டி அணிவித்தார். அதேபோல் கிறிஸ்தவ முறைப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்தனர். தொடர்ந்து உறவினர்களிடம் ஆசிபெற்றுக்கொண்டு குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

இது குறித்து பேசிய மணப்பெண் வால்மி இனாங்கா மொசொக்கே வணக்கம் என தமிழில் தொடங்கி இந்தியக் கலாசாரம் தனக்கு மிகவும் பிடிக்கும், இந்தியர்களையும் பிடிக்கும் எனவும் அதனால் இந்து முறைப்படி திருமணம் செய்ய ஆசைப்பட்டு அதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால் இந்தியா வந்து திருமணம் செய்துள்ளதாகவும் இதன் மூலம் தானும் இந்தியாவில் ஒருவர் ஆகிவிட்டதாகவும் இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments