FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

15 காவல் அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திர நாளையொட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

1 பிப்ரவரி 2024, 3:34 pm IST
பகிர்:

சுதந்திர நாளையொட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படும்:-
1. பிரேம்ஆனந்த்சின்ஹா, கூடுதல் காவல் ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு (தெற்கு), சென்னை பெருநகர காவல்.
2. க.அம்பேத்கார், காவல் ஆய்வாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, கடலூர்.
3. சு.சிவராமன்,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், அடையாறு போக்குவரத்து காவல் நிலையம்,சென்னை பெருநகர காவல்.
4. வை. பழனியாண்டி,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், இ2 மதிச்சியம் போக்குவரத்து காவல் நிலையம்,மதுரை மாநகரம்.
5. மா.குமார்,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஜே-10 செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் நிலையம், தாம்பரம் காவல் ஆணையரகம்.
இதேபோன்று புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள் 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:-

1. கோ. ஸ்டாலின், காவல்துறை துணை ஆணையாளர், தலைமையிடம், மதுரை மாநகரம்.
2. ச. கிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்தகுற்ற அலகு குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ,சேலம் மாநகரம்
3. மா. பிருந்தா, காவல் ஆய்வாளர், ரோஷனை காவல் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
4. அ.பிரபா, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, நாமக்கல் மாவட்டம்.
5. வீ. சீனிவாசன், காவல் ஆய்வாளர், ஆர்-2 கோடம்பாக்கம் காவல் நிலையம், சென்னை மாநகரக் காவல்.
6. மா.சுமதி, காவல் ஆய்வாளர்,அனைத்து மகளிர் காவல் நிலையம், கொடைக்கானல்,திண்டுக்கல் மாவட்டம்.
7. சி. நாகலெட்சுமி, காவல் ஆய்வாளர், கரியாப் பட்டினம் காவல் நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம்.
8. வெ.துளசிதாஸ், காவல் உதவி ஆய்வாளர், ட்டீ-12, பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு, சென்னை பெருநகர காவல்.
9. ச.ல. பார்த்தசாரதி, காவல் உதவி ஆய்வாளர், குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, ஒருங்கிணைந்த குற்ற அலகு-1, சென்னை.
10. கா.இளையராஜா, காவல் உதவி ஆய்வாளர், அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சென்னை. விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், தமிழ்நாடு முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments