முகப்பு
தமிழ்நாடு

நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என நாகை மாவட்ட மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 5 டிசம்பர் 2022, 10:50 am IST
கோப்புப் படம்
பகிர்:


நாகப்பட்டினம்: வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என நாகை மாவட்ட மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. 

தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டியுள் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 

பின்னர் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் நோக்கி நகரும். டிச.8 ஆம் தேதி காலையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி-தெற்கு ஆந்திர கடற்கரையை யொட்டிய பகுதியை நோக்கி புயல் நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

இந்நிலையில், வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என நாகை மாவட்ட மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.