முகப்பு
தமிழ்நாடு

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியரிடம் ரூ.1.30 லட்சம் கொள்ளை

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டரில் துப்பாக்கி முனையில் ஊழியரை கட்டிப் போட்டு திங்கள்கிழமை அதிகாலை ரூ.1.30 லட்சத்தை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவ

Updated On : 3 ஜனவரி 2022, 4:01 pm IST
பகிர்:


சென்னை: சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டரில் துப்பாக்கி முனையில் ஊழியரை கட்டிப் போட்டு திங்கள்கிழமை அதிகாலை ரூ.1.30 லட்சத்தை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய வளாகத்திற்கு வந்த மர்ம நபர்கள் டிக்கெட் கவுண்டருக்குள் நுழைந்து பணியில் இருந்த ஊழியர் திகரம் மீனாவை துப்பாக்கி முனையில் கட்டி வைத்துவிட்டு கவுண்டரில் இருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். 

காலை முதல் ரயிலைப் பிடிப்பதற்காக ரயில் நிலையம் வந்த எம்ஆர்டிஎஸ் பயணிகள், டிக்கெட் கவுண்டரில் இருந்த ஊழியர்களைக் காணாததால் திகைத்து, ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கவுண்டர் கேட் உள்பாக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் கேட்டை உடைத்து திறந்து பார்த்த போது திகரம் மீனா வாயை அடைத்து கைகால்களை கட்டிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு விசாரித்ததில் 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 

ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் அக்கம்பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியுடன் மர்ம நபர்களை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருவான்மியூர் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிக உள்ள திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ஊழியரிடம் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.