முகப்பு
தமிழ்நாடு

10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு: ஜன.21 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்!

கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் வருகிற வெள்ளிக்கிழமை(ஜன.21) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

Updated On : 19 ஜனவரி 2022, 5:51 pm IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் வருகிற வெள்ளிக்கிழமை(ஜன.21) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு 19.11.2021 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வர்கள் தாங்களே ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

தற்போது, பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 21.01.2022 (வெள்ளிக்கிழமை) முதல், அவரவர் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

இதில், நிரந்தர பதிவெண் கொண்ட தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை செப்டம்பர் 2021 துணைத்தேர்வில் தேர்வெழுதி, அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments