FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றிவைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை  ஏற்றார்.

Updated On : 26 ஜனவரி 2022, 8:18 am IST
முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி
பகிர்:


குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றிவைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை  ஏற்றார்.

நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். 

முன்னதாக காமராஜர் சாலையில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் குடியரசு தினம் இது. 

Advertisement

Advertisement

தேசியக்கொடியை ஏற்றிய பிறகு முப்படைகள் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றார். 

கரோனா பரவல் காரணமாக குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் பங்கேற்க அனுமதி வழங்கவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறே நிகழ்ச்சிகளை காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 6,800 காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments