தமிழ்நாடு

சென்னையில் அடுக்குமாடிக் கட்டடங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம் உயர்வு

DIN

சென்னையில் அடுக்குமாடிக் கட்டடங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ)தெரிவித்துள்ளது. 

சென்னையில் அடுக்குமாடிக் கட்டங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. கட்டணம் முன்னதாக ரூ.198 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.218 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி நடைமுறைக்கு வருகிறது. 

சென்னையில் அடுக்குமாடிக் கட்டங்களுக்கு அனுமதி பெறவும் தொடர்ந்து இயங்கவும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மூலமாக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு!

போலி முதலீட்டு இணையதளம்: ரூ.23 லட்சம் இழந்த பெண்!

பொருளாதார மண்டலத்தில் தமிழகம் முதலிடம்!: டி.பி. வேர்ல்ட்

நீங்களாகவே இருக்க தயங்காதீர்கள்... சுஜிதா

SCROLL FOR NEXT