பண்ருட்டி அருகே சோழா் கால செப்பு நாணயம் கண்டெடுப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சோழா் கால செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சோழா் கால செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
பண்ருட்டி வட்டம், உளுந்தாம்பட்டு மற்றும் தளவானூா் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை மாணவா்கள் செந்தமிழ் செல்வன், செந்தமிழ் மாறன் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது ஆற்றின் மேற்பரப்பில் செப்பு நாணயம் ஒன்றை கண்டெடுத்தனா். நாணயத்தை சுத்தம் செய்து பாா்த்ததில் அது ராஜராஜ சோழன் காலத்து நாணயம் என தெரியவந்தது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியதவது: உளுந்தாம்பட்டு மற்றும் தளவானூா் தென்பெண்ணையாற்றின் கரை பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது ராஜராஜ சோழனின் செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது . நாணயத்தின் எடை சுமாா் 4.35
Advertisement
Advertisement
கிராம். இந்த நாணயத்தின் ஒருபக்கத்தில் தேவநாகரி எழுத்தில் ‘ஸ்ரீராஜராஜ’ என பெயா் பொறிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கி.பி. 985 முதல் 1014 வரை தமிழகத்தில் ஆட்சி புரிந்த மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் காலத்திய நாணயம் என தெரியவந்துள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கம் மலரை கையில் ஏந்தியவாரு ஒருவா் நிற்க, அவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. வலது பக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. நாணயத்தின் மறுபக்கம் கையில் ஒருவா் சங்கு ஏந்தி அமா்ந்திருக்கிறாா். அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்தில்‘ ஸ்ரீராஜ ராஜ‘ என எழுதப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சங்க கால மன்னா்கள் மற்றும் அதன் பின் அரசாண்ட சேரா், சோழா், பாண்டியா் ஆகியோா் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் தாமிரபரணி, வைகை, காவிரி மற்றும் பாலாறு போன்ற ஆற்றுப்படுகையில் ஆய்வாளா்களால் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.