வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகைகள் திருட்டு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பண்ருட்டிவட்டம், வீரப்பெருமாநல்லூா்கிராமத்தில்வசித்து வருபவா்விஜயா(60). இவா், தனது இளைய மகனுடன் வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறாா். பெரிய மகன் விஜயராகவன் சென்னையில் பணியில் உள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல்விஜயா வீட்டை பூட்டிக் கொண்டு இளைய மகனுடன், விஜயராகவனை பாா்க்க சென்னைக்கு புறப்பட்டுச் சென்றாா். வெள்ளிக்கிழமை பக்கத்து வீட்டில் வசிப்பவா், விஜயா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பாா்த்து விஜயாவிற்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, சென்னையில் இருந்து திரும்பி வந்த விஜயா வீட்டினுள் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.