உதகை ராஜ்பவன் மாளிகை வந்தடைந்தார் வெங்கையா நாயுடு
குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு உதகையிலுள்ள ராஜ்பவன் மாளிகையை வந்தடைந்தார்.
நீலகிரி வந்துள்ள குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின் உதகையிலுள்ள ராஜ்பவன் மாளிகையை வந்தடைந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் உதகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று நீலகிரி வந்தடைந்தார். குன்னூரில் ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின்பு சாலை வழியாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு வந்தடைந்தார்.
நாளை உதகை லாரன்ஸ் பள்ளியில் நடைபெறும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர், மீண்டும் உதகை ராஜ்பவன் மாளிகைக்கு வந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு 20 ஆம் தேதி ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்று அங்கிருந்து தில்லி புறப்படுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement
குடியரசுத் துணைத் தலைவர் வருகையையொட்டி கோத்தகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் வருகையால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.