தமிழ்நாடு

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீபுக்கு கரோனா பாதிப்பு! 

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

DIN

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

71 வயதான ஷாபாஸ், எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற அவர் அங்கிருந்து, தனது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க லண்டனுக்கு சென்று, அங்கிருந்து மறுநாள் பாகிஸ்தான் திரும்பினார். 

கடந்த இரண்டு நாள்களாக பிரதமர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் செவ்வாயன்று அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக  தகவல் அமைச்சர் மரியம் அவுரங்கசீப் சுட்டுரை ஒன்றில் தெரிவித்தார்.

பிரதமர் விரைந்து குணமடைய மக்கள் அனைவரும் பிரார்த்திக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். 

தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தாண்டின் தொடக்கத்தில் ஜனவரி, 2020- ஜூன் மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT