ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நான் தலையிட்டதில்லை: சசிகலா
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ குழு மட்டுமே முடிவு எடுத்ததாக சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ குழு மட்டுமே முடிவு எடுத்ததாக சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஒரு போதும் நான் தலையிட்டதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது . இந்நிலையில், ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்து வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக கருத்துகளை சொல்லக் கூடிய அளவுக்கு நான் படித்தது கிடையாது. என்ன பரிசோதனை, எந்தந்த மருந்துகள் தர வேண்டும் என்று மருத்துவ குழுவினரே முடிவு செய்தனர். ஜெயலலிதாவுக்கு முதல்தர சிகிச்சை தர வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது. வெளிநாட்டுக்கு ஜெயலலிதாவை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க நான் என்றுமே தடையாக இருந்ததில்லை. எய்ம்ஸ் மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களும் அன்றைய சூழலில் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை தேவையில்லை என்று முடிவெடுத்தனர். ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன். விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.